பைக்-மொபட் மோதல். தந்தை பலி. மகள் படுகாயம்…

கோவை இடையர்பாளையம் ஜெ .ஜெ. நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் ( வயது 48) இவர் நேற்றுதனது மகள் சுபிக்ஷா (வயது 21) என்பருடன் மொபட்டில் தடாகம் ரோடு, டி.வி.எஸ். நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாகவந்த மற்றொருஇருசக்கர வாகனம் இவர்கள் சென்ற மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சண்முகசுந்தரம் பரிதாபமாக இறந்தார். மகள் சுபிக்ஷா படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வுபோலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரோஜா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார் .விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற இரு சக்கர வாகனத்தை தேடி வருகிறார்.