கோவை அருகே உள்ள வடவள்ளி அஜ்ஜனூர் ,வடக்கு விதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 44) ஆட்டோ டிரைவர்.இவரது மனைவி தனபாக்கியம் (வயது 37)இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர்.கணவர் குடிப்பழக்கம் உடையவர் இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.கருத்து வேறுபாடு காரணமாக தனபாக்கியம் தனது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார் இந்த நிலையில் வாழ்க்கையில்வெறுப்படைந்த பாலசுப்ரமணியம் நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து மனைவி தனபாக்கியம்வடவள்ளிபோலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை…
