கோவை பீளமேடு அருகே உள்ள கருப்பராயம்பாளையத்தில்உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் ஞானவேல் (வயது 33) டிரைவர். இவரது வீட்டின் 2வது மாடியில் வசிப்பவர் ஆனந்தகுமார் (வயது 40)இவர் வங்கிகளில் கடன் வாங்கி கொடுக்கும் ஏஜெண்டாக உள்ளார்.இவர் ஞானவேலிடம் கேரளாவிலிருந்து வங்கிகளில் மீட்கப்படாத நகைகள் ஏலத்துக்கு வருவதாக கூறினார்.இதை ஏலம் எடுக்க ரூ1லட்சம் கொடுத்தால் வாரத்திற்கு ரூ10 ஆயிரம் கூடுதல் பணம் தருவதாக கூறினார்.இதை நம்பிய ஞானவேல் ஆனந்த குமாரிடம் ரூ.6,30,000 கொடுத்தார்,அவர் கமிஷன் கொடுக்காமல் மோசடி செய்து விட்டார் இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்த ஆனந்த குமாரை நேற்று கைது செய்தனர்.