கோவை உக்கடம் ,ஜி. எம். நகர், கோட்டை புதூரை சேர்ந்தவர் நசீர் (வயது 53) இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கேரளா சென்றிருந்தார்.நேற்று திரும்பி வந்தார்.அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ20 ஆயிரத்தை காணவில்லை .யாரோ திருடிச சென்று விட்டனர் இது குறித்து நசீர் பெரியகடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள்.