உதகை ஏப்ரல் 23
நீலகிரி மாவட்ட கள்ளட்டி பகுதியில் உள்ள உள்ளத்தி கிராமம் காரபில்லும் என்னும் கிராமத்தில் 100 குடும்பத்திற்கும் மேல் மக்கள் வசிக்கின்றனர், இந்த ஊர் பகுதிக்கு 90 வருடங்களுக்கு மேலாக மல்லிகெரை என்னும் பகுதியிலிருந்து இயற்கையாகவே நீரூற்று உருவாகி ஓடையின் வழியாக ஊருக்குள் வருகிறது, இந்த நீரூற்று ஏறக்குறைய பல வருடங்களுக்கு மேல் ஊர் மக்கள் பயன்படுத்தி வருவது வழக்கம், இந்த இயற்கை நீரூற்று ஓடை பகுதியை ஆக்கிரமிப்பு செய்த அப்பகுதி தனியார் ஒருவர் தன்னுடைய விவசாய பூமிக்கு பயன்படுத்தும் விதமாக 5. 6 கிணறுகள் அனுமதி பெற்று இருக்கிறாரா என்பது சந்தேகம் உள்ளது என்று கிராம மக்கள் கூறுகின்றனர், பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் நீரோடியை ஆக்கிரமிப்பு செய்து, உள்ளத்தி கிராம காரப்பில்லு ஊர் பகுதி மக்களுக்கு போக வேண்டிய குடிநீரை தன் வசம் படுத்தி முழு ஓடை குடிநீரை தடுத்து விவசாய பூமிக்கு பயன்படுத்துவதும் தோண்டப்பட்ட கிணறுகளில் நிரப்புவதும் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது, இதனால் அப்பகுதியில் வாழும் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அன்றாட தேவைக்கு குடிநீர் இல்லாமல் ஒரு மாதத்திற்கு மேலாக தவித்து வருகின்றன.
இந்த நெருக்கடி சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் இருக்கும் வெளி மாவட்ட மாநிலத்திலிருந்து வரும் தனிநபரின் செயலால் அப்பகுதி மக்கள் இடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது, 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதால் அத்தியாவசியமான குடிநீர் எங்கள் கிராமத்திற்கு வர நீலகிரி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கும்படி ஊர் மக்களாகிய நாங்கள் மிகத் தாழ்மையுடன் மக்கள் குறைதீர்க்கும் நாளன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கியுள்ளனர், மற்றும் நீரோடை பகுதி ஆக்கிரமிப்பு செய்தும் தற்போது மின்சார இணைப்பு வசதிகளின் செய்து கொண்டு வருகின்றனர், தற்போது நீதிமன்ற உத்தரவின் படி நீரோடைகளை ஆக்கிரமிப்பு செய்வது சீர்குலைப்பது சட்டவிரோதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மீறியும் தற்போது இந்தப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்தது அப்பகுதி மக்களிடையே அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது??