கோவை துடியலூர் பக்கம் உள்ள உருமாண்டம் பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் .இவரது மனைவி சங்கீதா ( வயது 26) இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. 5 வயதில் ஒரு மகள் உள்ளார்.இந்த நிலையில் சங்கீதா அடிக்கடி செல்போன் பேசிக்கொண்டிருப்பாராம். இதை கணவர் மணிகண்டன் கண்டித்தார். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 10-ம் தேதி செல்போன் பேசிக்கொண்டிருப்பதை கண்டித்தார்.இதனால் ஆத்திரமடைந்த சங்கீதா தனது 5 வயது குழந்தையுடன் எங்கோ திடீரென்று மாயமாகிவிட்டார். இது குறித்து மணிகண்டன் துடியலூர் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.
செல்போன் பேசியதை கண்டித்ததால் குழந்தையுடன் தாய் திடீர் மாயம்..!
