கோவை நகைக் கடையில் பர்தா அணிந்து சென்று நகை திருடிய தாய் மகள் கைது
கோவை பெரிய கடை வீதியில் கடந்த 15 – ஆண்டுகளாக நகைக் கடை நடத்தி வருபவர் சிவகுமார் இவரது கடைக்கு 2 பெண்கள் பர்தா அணிந்து வந்தனர். 5 பவுன் செயின் வாங்க வேண்டும் என்று கூறினார்கள். சிவகுமார் நகைகளை எடுத்து காட்டினார். அப்போது அவர்கள் வைத்திருந்த பித்தளை நகையை அங்கு வைத்துவிட்டு நல்ல நகையை எடுத்துக் கொண்டு, செயின் பிடிக்கவில்லை என்று கூறி நைசாக சென்று விட்டனர். பின்னர் நகைகளை சரி பார்த்த போது நகையை திருடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து கடைவீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்து 2 பெண்களை கைது செய்தனர். விசாரணையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த சுமதி, அவரது மகள் பிரியதர்ஷினி என்பதும் தெரியவந்தது. நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்