கோவை அருகே உள்ள கே. கே. புதூர், நஞ்சம்மாள் வீதியைச் சேர்ந்தவர் ராஜன். இவரது தாயார் தனலட்சுமி ( வயது 75 ) தங்கை பிரபா ஆகியோர் வீட்டில் தனியாக இருந்தனர் . அப்போது இவர்களைப் பற்றி முன்கூட்டி தெரிந்த ஒரு பெண் இவர்களது வீட்டில் புகுந்தார். கதவை உள் பக்கமாக தான் போட்டுவிட்டு தனலட்சுமி , பிரபா ஆகியோரின் முகத்தில் மயக்க மருந்து “ஸ்பிரே ” செய்தார். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றார் . அப்போது அவர்கள் இருவரும் சத்தம் போட்டதால் அந்தப் பெண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து காட்டூர் ராம்நகர் ,கண்ணன் மனைவி மீனாட்சி ( வயது 49) என்பவரை கைது செய்தனர் .இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..
தாய்,மகள் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே அடித்து கொள்ளை முயற்சி – பெண் கைது..!
