கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள எம் .ராயர்பாளையம், வடக்கு
வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மனைவி கனகதாரணி ( வயது 34)இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவர் விட்டு பிரிந்து கடந்த 4 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கனக தாரணி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அதே இடத்தில் உடல் கருகி அதே இடத்தில் இறந்தார். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave a Reply