கோவை அருகே உள்ள சின்னியம்பாளையம் இருகூர் ரோடு கிருஷ்ண கவுண்டர் நகரை சேர்ந்தவர் ஞானதுரை. இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சோனியா (வயது 24) இவர்களுக்கு 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. செல்சியா ( வயது 6)டேனியல் ராஜா (வயது3) ஆகிய 2குழந்தைகள் உள்ளனர்.கடந்த 21ஆம் தேதி சோனியா தனது 2 குழந்தைகளுடன் எங்கோ மாயமாகிவிட்டார்.இதுகுறித்து ஞானதுரை பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
Leave a Reply