2 வயது குழந்தையுடன் தாய் திடீர் மாயம்..!

கோவை ராமநாதபுரம், மருதாச்சலம் மூர்த்தி வீதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் இவரது மனைவி ரேவதி ( வயது 24 )குடும்ப தகராறு காரணமாக இவர் நேற்று தனது 2 வயது மகன் கோகுல் பிரசாத்துடன் எங்கோ மாயமாகி விட்டார்.அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கணவர் தியாகராஜன் இராமநாதபுரம் போலீஸ் புகார் செய்தார்.. போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள.