கோவை பீளமேடு கங்குவார் வீதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி கிருஷ்ண பிரியா ( வயது 21) இவர் தேனி மாவட்டம், நாகலாபுரம், ஸ்ரீரங்கபுரத்தைச் சேர்ந்தவர் இவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து 8 மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக கிருஷ்ணப்பிரியா கோபித்துக் கொண்டு தேனியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் கணவர் சமரசம் செய்து கோவைக்கு அழைத்து வந்தார். இந்த நிலையில் கிருஷ்ண பிரியா நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து அவரது தாயார் வெண்ணிலா பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். புகாரில் மகளின் சாவில் மர்மம் இருப்பதாக கூறியுள்ளார். இதன் பேரில் உதவி போலீஸ் கமிஷனர் பார்த்திபன் மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..
இளம் பெண் மர்ம மரணம் – தாய் அளித்த புகாரில் போலீஸ் விசாரணை.!!
