கோவை மாவட்டம் காரமடை வனச்சரகம் நெல்லித்துறை காப்புக்காடு பகுதியில் வனப்பணியாளர்கள் நேற்று ரோந்து சுற்றி வந்தனர். அப்போது மானார் சரக பகுதியில் பெண் யானை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண் யானைக்கு சுமார் 8 முதல் 10 வயது இருக்கும்.யானையின் உடலில் மேற்பகுதியில் எந்த காயமும் இல்லை.இந்த யானை நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்க படுகிறது. இன்று உடற்கூறாய்வு நடக்கிறது. யானை சாவு குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவையில் பெண் யானை மர்ம மரணம்- வனத்துறையினர் விசாரணை..!
