புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரகுமார். இவரது மகன் சவுதாலன் ( வயது 29)நேற்றைய இவரது மனைவி செல்போனில் இவரிடம் தொடர்பு கொண்டார், அப்போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.இந்த நிலையில் இவர் நேற்று காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் பிணமாக கிடந்தார்.இதுகுறித்து இவரது மனைவி காட்டூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார்விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இவர் எப்படி இறந்தார்? என்று தெரியவில்லை .இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
கோவை லாட்ஜில் வாலிபர் மர்ம மரணம்
