திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரியாகுஞ்சூர் காப்பு காட்டில் வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டு வருவதாக சாத்தனூர் வனச்சர அலுவலர் சீனிவாசனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அறியா குஞ்சூர் காப்பு காட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஐந்து மான் காட்டு பன்றி மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வனவிலங்குகளை வேட்டையாடிய கும்பலை சாத்தனூர் வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்
அறியாகுஞ்சூர் வனப்பகுதியில் புள்ளி மான் காட்டுப்பன்றி காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ள நிலையில் சமூக விரோதிகள் கள்ளத்துப்பாக்கி நாட்டு வெடிகுண்டு உள்ளிட்டவைகளை பயன்படுத்தி தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருவதாக சாத்தனூர் வனச்சரக அலுவலர் சீனிவாசனுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சாத்தனூர் வனச்சரக அலுவலர் சீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்
அரியாகுஞ்சூர் காப்பு காட்டில் 5 புள்ளி மான் காட்டுப்பன்றியை வேட்டையாடி மேலும் வனவிலங்குகளை வேட்டையாட கள்ளத் துப்பாக்கியுடன் வனப் பகுதிக்குள் சுற்றித்திரிந்த இளயாங்கண்ணி பகுதியை சேர்ந்த வசந் மற்றும் 6 பேர் கொண்ட கும்பலை மடக்கி பிடிக்க முற்பட்டபோது தென்பெண்ணை ஆற்றின் வழியாக அந்த கும்பல் தப்பி ஓடி உள்ளதாகவும் அவர்களை தீவிரமாக தேடி வருவதாக வனச்சர அலுவலர் தெரிவித்துள்ளார்..