பூந்தமல்லி : ஆவடி காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பூந்தமல்லி பாரிவாக்கம் போக்குவரத்து சிக்னல் அருகே இன்ஸ்பெக்டர் லாரன்ஸ்க்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அ ப்போது அந்த வழியாக வந்த ஐச ர் கன்டெய்னர் லாரியை tn 32 al 6165 என்ற பதிவெண் கொண்டது. அந்த லாரியை மடக்கி போலீசார் துணையோடு சோதனையிடுகையில் 352 கிலோ குட்கா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனை அ டுத்து லாரியை ஓட்டி வந்த கடத்தல் மன்னன் இளையராஜா வயது 38. தகப்பனார் பெயர் ஏழுமலை. கக்கன் தெரு கப் பி யம் புலியூர் விக்கிரவாண்டி விழுப்புரம். என்பவனை கைது செய்து விசாரிக்கையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட் காவை பெங்களூரில் இருந்து கடத்தி வந்ததாக கடத்தல் மன்னன் ஒப்புக்கொண்டான்.சென்னைக்கு வாங்கி வந்து விற்பனைக்கு செய்ய முயன்ற போது பூந்தமல்லி போலீசாரிடம் வசமாக மாட்டிக் கொண்டேன் என வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான். கைது செய்யப்பட்டுள்ள இளையராஜா லாரியுடன் குட்காவையும் பூந்த மல்லி வழக்குப்பதிவுடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.