இலங்கை கடல் பகுதியில் மீன்பிடி படகில் ரூ.280 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் கடத்தல் – 6 பேர் கைது..!

லங்கை கடல் பகுதியில் ரூபாய் 250 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

இலங்கை டோன்ட்ராவை சுற்றியுள்ள பகுதிகளில் இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் சென்று கொண்டிருந்த மீன்பிடி படகை கடற்படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 111 கிலோ ஹெராயின் போதைப்பொருட்களும், 10 கிலோ கஞ்சாவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து போதை பொருட்களையும், படகையும் பறிமுதல் செய்த கடற்படை அதிகாரிகள் படகில் இருந்த ஆறு பேரையும் கைது செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் மதிப்பு இலங்கை ரூபாயில் ரூபாய் 280 கோடி ஆகும். இதைத்தொடர்ந்து, அதிகாரிகள் போதைப்பொருள்கள் கடத்தல் தொடர்பாக 6 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.