தேசிய அளவிலான பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பரஸ்பர பரிமாற்ற நிகழ்வு..!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறை சார்பாக தேசிய அளவிலான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பரஸ்பர பரிமாற்ற நிகழ்வு 14/9/2023 ஆம் தேதி முதல் 15/9/2023 வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேட்ரிஷியன் கல்லூரி சென்னை, பெங்களூர் சுரானா கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் விமல் சந்த் ஜெயின் செயலாளர் லிக்மி சந்த் ஜெயின் ஆகியோர் தலைமையில் முதல்வர் முனைவர் இன்பவள்ளி மக்கள் தொடர்பு அலுவலர் சக்திமாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இதில் மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி கீர்த்திகா வரவேற்புரை நல்கினார். முதல்வர் முனைவர் இன்பவள்ளி பாராட்டுரை வழங்க, துணை முதல்வர் மற்றும் வணிகவியல் துறை தலைவர் நித்யா நிகழ்ச்சி நிரல் சார்ந்த செய்திகளை எடுத்துரைத்தார். சுரானா கல்லூரி முதல்வர் முனைவர் ரம்யா தொழில் துறை ஆராய்ச்சியின் முக்கியத்துவம் பற்றியும் வணிகவியல் துறை பேராசிரியர் ரஞ்சிதா நிதி நிலை மேலாண்மை குறித்தும் மற்றும் பேட்ரிஷியன் கல்லூரி வணிகவியல் துறை தலைவர் முனைவர் யுனிகா தொழில் முனைவோர்கள் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி வினோதினி டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்ற தலைப்பிலும் பேட்ரிஷியன் கல்லூரியை சார்ந்த மாணவிகள் பல்வேறு தலைப்புகளிலும் பாடம் சார்ந்த கருத்துரைகளை பகிர்ந்தனர். பல்வேறு போட்டிகள் மற்றும் மரக்கன்று நடுதல் போன்ற செயல்பாடுகளும் நடைபெற்றது. மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி மாணவிகள் பேட்ரிஷியன் கல்லூரி மாணவர்கள் மற்றும் சுரானா கல்லூரி மாணவர்கள் இணைந்து கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தினார். செப்டம்பர் 15ஆம் தேதி பியர் ஷூஸ் பிரைவேட் லிமிடெட் ஆம்பூர் தொழிற்சாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் ஏலகிரி மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்று வந்தனர். பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பேட்ரிஷியன் கல்லூரி மற்றும் சுரானா கல்லூரி மாணவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழும் கல்லூரிகளுக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று  பயனடைந்தனர். நிறைவாக இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி பூஜா நன்றியுரை ஆற்றினார்.