புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான கீழ்புத்துபட்டு அருள்மிகு பராசக்தி கோவில் அமைந்துள்ளது. இதன் கும்பாபிஷேக விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக யாக சாலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து கலசம் புறப்பாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விமான கோபுரத்திற்கும், மூலமூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகமானது நடைபெற்றது. விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை மற்றும் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம்,அமைச்சர் தேனி ஜெயக்குமார், செல்வகணபதி எம் பி
உருளையன்பேட்டை கணேஷ், பிரபுதாஸ்,புதுவை தமிழ் சங்கத் தலைவர் முத்து, நந்தா கலைவாணன் திருச்சிற்றம்பலம் மூர்த்தி, ராமானுஜம், கீழ்புத்துப்பட்டு, அனிச்சங்குப்பம் (எ)
நம்பிக்கை நல்லூர் மீனவர் கிராம பஞ்சாயத்து நிர்வாக குழு தலைவர்கள் அருள், கண்ணியப்பன், மோகன் ,ஜெயபால், நாராயண மூர்த்தி, தனுசு ,சிவராஜ், வல்லதான், செல்வகுமார் ,செல்வ பாண்டியன், சுமன், குமரவேல், பிரசாந்த், தீபன் ராஜ் பிரவீன் குமார் , புதுச்சேரி எல்ஐசி பரமசிவம்
முருகன் வைத்தியலிங்கம் சிவப்பிரகாசம்,உள்பட பலர் கலந்து கொண்டனர் அவர்களுக்கு ஆலயம் சார்பில் பாஜக மாநில தலைவர் சாமிநாதன் மரியாதை செய்தார்.
கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றும் போது ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷத்துடன் பராசக்தி சாமியை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வணங்கி சென்றனர்..