கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் 130க்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சூலூர் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. அதன் 2024/2025 ஆண்டின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருடைய பதவி ஏற்பு விழா தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வைத் துறை அமைச்சர் சு. முத்துசாமி கலந்து கொண்டு புதிய நிர்வாகிகள் தலைவர் பசுமை நிழல் விஜயகுமார் ,செயலாளர் அரவிந்தன் பொருளாளர் நாட்ராயன் துணைத் தலைவர் சிற்பிளா செந்தில்குமார் துணைச் செயலாளர் கார்த்திகேயன் துணை பொருளாளர் செல்வகுமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார். புதிய நிர்வாகிகளை சிபாக்கா தலைவர் எஸ். பி. ராமநாதன் பணியில் அமர்த்தினார். புதிய உறுப்பினர்களை சங்கத்தின் பட்டய தலைவர் காளிமுத்து அறிமுகம் செய்து இணைத்து வைத்தார். சிறப்பு விருந்தினராக புர ப்பல் நிறுவனர் வரதராஜன், கணேசா ரெடி மிக்ஸ் சிவகுமார், ஆர். வி. எஸ் கல்வி குழுமம் அறங்காவலர் பாலச்சந்திரன், சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் “கல்லும் சொல்லும்” என்கின்ற தலைப்பில் புலவர் செந்தலை ந. கௌதமன் சிறப்புரையாற்றினார். முன்னதாக முன்னாள் தலைவர் பி.குமரேசன் வரவேற்புரையாற்றினார் சென்ற ஆண்டின் செயல் திட்ட அறிக்கையை சிற்பி இல. செந்தில்குமார் எடுத்துக் கூறினார். சங்க ஆலோசகர் சாந்தி செல்வராஜ் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வில் கோவை மாவட்டத்திலிருந்து பல்வேறு பொறியாளர் சங்கத்திலிருந்து வருகை தந்த நிர்வாகிகளுக்கு சிறப்பு செய்யப்பட்டு நிகழ்ச்சியினை உடனடி முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன். செயற்குழு உறுப்பினர் சரவணகுமார் ஆகியோர் தொகுத்து வழங்கினர். நிறைவாக சங்க பொருளாளர் நாட்ராயன் நன்றி கூறினார்..