திருச்சி விமான நிலைய உள் முனையத்துக்கு புதிய பேருந்து – அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்..!

திருச்சி புதிய விமான நிலையம் பயன்பாட்டிற்கு வந்ததிலிருந்து பொதுமக்கள் அந்த முனையத்திற்கு செல்ல இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று வந்தார்கள். வெளிநாட்டுக்கு பயணம் செய்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர் .இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் புதிய பேருந்து விட முடிவு செய்யப்பட்டது .நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு , இன்று திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டலத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து நேரடியாக பொதுமக்கள் மற்றும் விமான பயணிகள் பயன்பெறும் வகையில் திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம், நம்பர் ஒன் டோல்கேட் வரை, பேருந்து இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் , மாவட்ட ஆட்சித் தலைவர்  மா. பிரதீப்குமார் , வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் மு. அன்பழகன்  ,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் திரு. இரா. பொன்முடி அவர்கள், திருச்சிராப்பள்ளி விமான நிலைய இயக்குனர் திரு.கோ. கோபாலகிருஷ்ணன் அவர்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர் திரு .ஆ .முத்துகிருஷ்ணன் அவர்கள், துணை மேலாளர் (வணிகம்) திரு. புகழேந்தி ராஜ் அவர்கள், உதவி மேலாளர்( தொழில்நுட்பம்) திரு. ராஜேந்திரன் அவர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த பஸ் போக்குவரத்து ஆனது பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது