புதுப்பெண் திடீர் மாயம்..!

கோவை ஆர் .எஸ் .புரம் ,பூ மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 25) பூக்கட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் விநாயகபுரத்தைச் சேர்ந்த சிலம்பரசி ( வயது 23) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பூ மார்க்கெட் சித்தி விநாயகர் கோவில் வீதியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அவரது கணவர் கடைக்கு சென்று விட்டார். மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது மனைவியை காணவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து கணவர் தினேஷ்குமார் ஆர். எஸ். புரம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..