தர்மபுரி மாவட்டம்,ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் முனிசாமி. அவரது மகன் பிரதீப் குமார் (வயது 26) ஒண்டிபுதூர் எஸ். எம். எஸ். லே – அவுட்டில் தங்கி இருந்து சமையல் தொழில் வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் மனமுடைந்த பிரதீப்குமார் நேற்று அவர் தங்கியிருந்த வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை..
