செங்குன்றம் பகுதியில் புதிய போக்குவரத்து புலனாய்வு பிரிவு அலுவலகம் திறப்பு..!

செங்குன்றம் : ஆவடி காவல் ஆணையரகம் எல்லைக்குட்பட்ட செங்குன்றம் காவல் மாவட்டம் விபத்து த்துக்கள் மற்றும் வழக்குகளை பதிவு செய்யும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு கடந்த 1.1.2023 முதல் புதியதாக துவங்கப்பட்டு மாதவரம் பால் பண்ணை காவல் நிலைய வளாகத்தில் மூன்றாவது மாடியில் செயல்பட்டு வந்தது. இந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய் பிரிவு காவல் எல்லையானது 14 காவல் நிலையங்களை உள்ளடக்கி சுமார் 50 கிலோ மீட்டரை உள்ளடக்கியது. மேற்படி செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு மாதவரம் பால் பண்ணை காவல் நிலையம் தெற்கு கடை கோடி பகுதியில் உள்ளதால் பொதுமக்கள் சாலை விபத்து சம்பந்தமாக மேற்படி காவல் நிலையத்திற்கு வந்து செல்ல அதிக நேரம் ஆவதாலும் மிகுந்த சிரமம் ஏற்படுவது னாலும் அதேபோல் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்து நடந்த பகுதிகளுக்கு உடனடியாக செல்ல புரியாமல் காலதாமதம் ஏற்படுவதாலும் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆவடி போலீஸ் கமிஷனர் கே. சங்கர் அவர்களின் உத்தரவின் பேரில் புதிதாக செங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள பிடபிள்யுடி அலுவலக சாலையில் உள்ள காவலர் படை குடியிருப்பில் 2 வது மாடியில் செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு அலுவலகம் அமைக்கப்பட்டது. பொதுமக்கள் அதனை வரவேற்று வருகிறார்கள். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட செங்குன்றம் போக்குவரத்து பிரிவு புலனாய்வு அலுவலகம் காவல் கூடுதல் ஆணையாளர் தலைமையிடம் மற்றும் போக்குவரத்து எஸ். ராஜேந்திரன் அவர்களின் தலைமையில் போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் வி. அன்பு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது..