தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பேருந்து பணிமனைகளில் பணியில் உள்ள அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பிலும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கத்தின் சார்பிலும் கழகங்களின் வரவுக்கும் செலவுக்கு உள்ள வித்தியாச தொகையை வழங்கிட கோரியும், ஓய்வூதியதாரர்களின் ஒப்பந்த பயன் டி ஏ உயர்த்தி வழங்கிடவும், 01/04 /2023 க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பென்ஷன் வழங்கிட கோரியும், காலி பணியிடங்களை நிரப்பிடவும், வாரிசுகளுக்கு வேலை கொடுத்திடவும் ,15 வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை பேசி முடிக்கவும் போன்ற 6 அம்ச கோரிக்கை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சூலூர் பணிமனையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்சங்கத் தலைவர் சுப்பிரமணி, சூலூர் கிளை சி ஐ டி தங்கராஜ், வி சி க ஏசு குமார்,ஐ என் டி யு சி ரவி உட்பட ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள நிர்வாகிகள் தொழிலாளர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.