உதகை ஏப்ரல் 21
நீலகிரி மாவட்டம் உலிக்கல் (தேர்வுநிலை) பேரூராட்சி பகுதிகளில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின்படி பேரூராட்சிகளின்உதவி இயக்குநர் அறிவுரையின்படி உலிக்கல் பேரூராட்சிகுக்குட்பட்ட சேலாஸ் பஜார்பகுதியில் உள்ள வணிக வளாக கடைகளில் தீவிர நெகிழி ஒழிப்பு பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தவிர்திடும்வகையில் மஞ்சப் பை மற்றும் துணிப்பைகளை உபயோகிப்பது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது, இந்நிகழ்வில் பேரூராட்சி செயல் அலுவலர், மன்ற தலைவர், மன்ற உறுப்பினர்கள்மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர், மற்றும் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் உலிக்கல் பேரூராட்சிக்குட்பட்ட சேலாஸ் பஜார் பகுதி மக்கள், வியாபாரிகள் என பலர் கலந்துகொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தவிர்த்திடும் வகையில் மஞ்சப்பை மற்றும் துணிப்பைகளை உபயோகிப்பதை முழுமையாக நடைமுறையில் செயல்படுத்த தீர்மானித்துள்ளனர்.