மருதமலை முருகன் கோவில் மலைப்பாதையில் 4 நாட்கள் கார்கள் செல்ல தடை.!!

கோவை : பக்தர்களால் 7-வது படை வீடு என்று அழைக்கப்படும் கோவை மருதமலை முருகன் கோவிலில் வருகிற 2-ம் தேதி சூரசம்ஹார விழா தொடங்குகிறது. மேலும் 8 -ந் தேதி சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி மருதமலைக்கு கோவை மட்டும் அல்லாமல் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். மேலும் வருகிற 31-ந் தேதி தீபாவளி பண்டிகை யொட்டி பக்தர்களின் வருகை அதிகரிக்கும். எனவே பக்தர்களின் கூட்டம் காரணமாக மருதமலை அடிவாரத்தில் இருந்து கோவில் வரை உள்ள மலைப்பாதையில் வருகிற 31 – ந் தேதி மற்றும் 1-ந்தேதி முதல் 3 – ந் தேதி வரை மொத்தம் 4 நாட்கள் கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள்மற்றும் கோவில் சார்பில் இயக்கப்படும் பஸ்களிலும் மலைப்படிகள் வழியாகவும் சென்று பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்யலாம்..