எத்தனை மோடி வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்து விட முடியாது – அமைச்சர் உதயநிதி உரை..!

புதுக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “எத்தனை மோடி வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது.

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சிபிஐதான் பாஜகவின் தொண்டர் படை. தேர்தல் நேரத்தில்தான் எதிர்க்கட்சியினரை பயமுறுத்த அந்த தொண்டர் படையை பாஜகவினர் களமிறக்குவர். 2014 ஆம் ஆண்டு முதல் இன்று வரை மோடி அரசு, 121 அரசியல் தலைவர்களை அமலாக்கத்துறை விசாரித்துள்ளார். இதில் 115 பேர் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மணிஷ் சிசோடியா, மகாராஷ்டிரா, தேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பீகார், தெலங்கானா, கர்நாடகா மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த பாஜகவின் எதிர்க்கட்சி தலைவர்களை பாஜக குறிவைத்தது.

செந்தில் பாலாஜியை 18 மணிநேரம் சோதனை என்ற பெயரில் கொடுமைபடுத்தியுள்ளனர். கழிப்பறைக்கு கூட செல்லவிடாமல், விசாரணை செய்துள்ளனர். 2019, 2021 தேர்தல்களை போல 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவை விரட்டியடிக்க வேண்டும். நாங்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம். அமலாக்கத்துறைக்கும் பயப்பட மாட்டோம். முதல்வர் நடத்திய போராட்ட த்தால், ஜல்லிக்கட்டுத் தடை நீக்கப்பட்டது. தமிழகத்தில் தொகுதிக்கு ஒரு ஜல்லிக்கட்டு திடல் அமைக்கப்படும். மோடி அதானி இல்லாமல் வெளிநாடுக்கு செல்லமாட்டார். உலக பணக்காரர் பட்டியலில் அதானி இரண்டாம் இடம். அதற்கு காரணம் பிரதமர் மோடி.” என்றார்.