இனி விஜய்… இதுவரை இல்லாத ஒரு பிரம்மாண்டம்… கவரும் கட்டவுட்டுகள்… காண துடிக்கும் தொண்டர்கள்… நாளை த.வெ.க மாநாடு.!!

மிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலையில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து கடந்த 4-ம் தேதி பூமி பூஜைக்கு பந்தல் கால் நாடும் பணி நடைபெற்றது.

மாநாட்டு திடலில் இருந்து தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்சி கொடிகள், சீரியல் விளக்குகள், சாலை நடுவே உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் வாழை மரங்கள், 5 ஆயிரம் கரும்புகளுடன் வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய்யின் கட்சி கொள்கை எந்த மாதிரி இருக்கும் என்று பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்த நிலையில், மாநாட்டு திடலில் இடம் பெற்றுள்ள கட்-அவுட்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேடையின் இடது புறத்தில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் வேலு நாச்சியார், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலை அம்மாள் ஆகியோரது கட்-அவுட்கள் இடம் பெற்றுள்ளது.

 

மாநாட்டு திடலில் 100 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தில் 20 அடி நீளமும், 30 அடி அகலமும் கொண்ட கொடி பறக்க விடப்படுகிறது. இவை கயிறு வைத்து இழுத்தும், ரிமோட் மூலமாகவும் இந்த கம்பத்தில் கொடியை ஏற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மாநாட்டில் அதிகளவு தொண்டர்கள் கூடுவதால் தொழில்நுட்ப சாதனங்கள் இயங்குவதற்கு எதுவாக தற்காலிக செல்போன் டவர் ஒன்று அங்கு அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், 700 கண்காணிப்பு கேமராக்கள், 100-க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள், 350 நடமாடும் கழிவறைகள் உள்ளிட்டவைகளின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.