உச்சநீதிமன்ற செய்தியாளர் ஆவதற்கு சட்ட படிப்பு தேவையில்லை – தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவு..!

புதுடில்லி: உச்சநீதிமன்ற செய்தியாளர் பணிக்கு சட்டம் படிப்பு தேவையில்லை என தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்துள்ளார்.உச்சநீதிமன்றம் தொடர்பான செய்திகள், முக்கிய அறிவிப்புகளை ஊடகங்களுக்கு வழங்குவதற்காக செய்தியாளர்கள் அல்லது நிருபர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இந்நியமனத்திற்கு சட்ட கல்லூரியில் பட்டம் பெற்றிருப்பது நிபந்தனையாக இருந்து வந்தது. இதனை தளர்த்தி தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, உச்சநீதிமன்றத்தின் அங்கீகாரம் பெற்ற செய்தியாளராக விண்ணப்பிக்க சட்டப்படிப்பு தேவை என்ற நிபந்தனையை தளர்த்தி அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன். இனி சட்டபடிப்பு என்ற தகுதி தேவையில்லை. சட்டப் பின்னணி இல்லாதவர்களும் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் அங்கீகாரம் பெற்ற செய்தியாளர்கள் உச்ச நீதிமன்ற வளாகத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்தி கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. என்றார்