சென்னையில் வீடுகளின் முன்பு ‘நோ பார்க்கிங்’ போர்டு… காவல்துறைக்கு ஹைகோர்ட் போட்ட உத்தரவு.!!

சென்னையில் வீடுகளின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ‘நோ பார்க்கிங்’ போர்டுகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையில் உள்ள பல வீடுகளின் கதவுகளில் நோ பார்க்கிங் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்தது. மிகவும் குறுகிய இடத்தில் இருசக்கர நான்கு சக்கர வாகனங்களை பார்க்கிங் செய்வதால் வீட்டுக்குள்ள இருந்து வெளியே செல்வதும் வெளியே இருந்து வீட்டுக்குள் செல்வதும் மிகவும் கடினமானதாக இருப்பதால் பல வீடுகளில் வாசலுக்கு வண்டிகளை நிறுத்தக்கூடாது என்பதை குறிக்கும் நோ பார்க்கிங் அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சில விளம்பரதாரர்கள் வீடுகளின் உரிமையாளர்களிடம் ஒப்புதல் பெறாமல் நோ பார்க்கிங் என்ற அறிவிப்பு பலகையை வைத்துவிட்டு அதில் தங்கள் நிறுவனத்தின் விளம்பரத்தையும் வைத்து விடுகின்றனர். வீட்டில் உரிமையாளர் தங்கள் வீட்டிற்கு பார்க்கிங் என்பது தொல்லையாக இருந்தால் அவர் வைப்பது என்பது வேறு, ஆனால் ஏதோ ஒரு நிறுவனத்தினர் வீட்டில் உரிமையாளரிடம் எந்தவித அனுமதியும் இல்லாமல் நோ பார்க்கிங் விளம்பரத்தை ஒட்டி அதன் நிறுவனத்தையும் விளம்பரப்படுத்திக் கொள்வது குறித்துதான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

இது குறித்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பதிலளிக்குமாறு போக்குவரத்து காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.