அமைதிக்கான நோபல் பரிசுக்கு மிகப் பெரிய போட்டியாளர் பிரதமர் மோடிதான் என்று நோபல் பரிசுக் குழுவின் துணைத் தலைவர் அஸ்லே டோஜே மிகப்பெரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
இன்று உலகில் உள்ள அமைதியின் மிகவும் நம்பகமான முகமாக பிரதமர் மோடி திகழ்கிறார் என்றும்,போரிடும் நாடுகளுக்கு இடையே போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்டக்கூடிய நம்பிக்கைக்குரிய தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார்.
பிரதமர் மோடியின் கொள்கைகளால் இந்தியா பணக்கார நாடாக மாறி வருகிறது என்றார்.மிகவும் தகுதியான தலைவர் பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசை வென்றால் அது வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
ஆஷ்லே டோஜே செய்தி நிறுவனத்திடம் பேசுகையில் , இந்தியா இப்போது வல்லரசு நாடு என்றும், உலக அரசியலில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வரும் நிலையில், பிடனுக்கும் புதினுக்கும் இடையே நிலவும் பதற்றத்தைத் தணிக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமைதியின் தூதராகக் கருதப்படுகிறார்.
ரஷ்யா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி, போர் முக்கியமல்ல, எதிர்காலம் அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். உலகில் அமைதியை நிலைநாட்ட இந்தியா எடுத்து வரும் முயற்சிகளை பாராட்டிய ஆஷ்லே டோஜே, உலக நாடுகள் இந்தியாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்,நான் இந்தியப் பிரதமர் மோடியின் தீவிர ரசிகன் என்று கூறினார்.
அவரது இந்த கருத்து உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது MagUpdates என்ற ட்விட்டர் கணக்கும் இதை ஒரு சிறு செய்தியாக வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.