கோவை செல்வபுரம் ரங்கசாமி காலனியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் ( வயது 45 )இவர் சொக்கம்புதூர் ரோடு கிருஷ்ணா நகரில் நகைப்பட்டரை நடத்தி வருகிறார். இவரிடம் மேற்கு வங்காளத்தை சேர்ந்த பாபன் என்பவர் நகை தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரிடம் ரகு குமார் கம்மல் செய்வதற்காக 150கிராம் தங்கம் கொடுத்தார். அவர் கம்மல் செய்து கொடுக்காமல் தங்கத்துடன் சொந்த ஊருக்கு தப்பி ஓடி விட்டார். இது குறித்து பட்டறை அதிபர் ரகு குமார் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வடமாநில நகை தொழிலாளி பாபனை தேடி வருகிறார்கள்..