குளிக்கும்போது மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பரிதாப பலி..

கோவை மே 17 பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முகம்மது மொய்தீன். இவரது மகன் முகம்மது சம்சுதீன் (வயது 20) கிணத்துக்கடவு கொண்டம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று குழாயில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது மின் வயர் குழாயில் பட்டு மின்சாரம் தாக்கியது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் . அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இறந்தார் . இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.