கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒன்னிபாளையம் பிரிவில் ஒரு பள்ளிக்கூடம் அருகே சந்தேகப்படும்படி நேற்று மாலை ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் அந்த வழியாக ரோந்து சுற்றி வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமோதரன் சோதனை நடத்தினார். அவரிடம் 5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஒடிசாவை சேர்ந்த சுகந்த குமார் (வயது 23) என்பது தெரிய வந்தது . கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதை வடமாநிலத்தில் இருந்து ரயிலில் கடத்தி வந்து பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள மாணவர்களுக்கும் , வடமாநில தொழிலாளர்களுக்கும் ரகசியமாக விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..