ஆனைகட்டி அருகே கஞ்சாவுடன் வடமாநில வாலிபர் கைது..!

கோவை தடாகம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தடாகம் காவல் துறையினர் ஆனைகட்டி சோதனை சாவடியில் சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த மராகோ கராட் மகன் பபித்ரா கராட் (19) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.40000/- மதிப்புள்ள 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2024 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 19 நபர்கள் மீது 16 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 12.330 கிலோ கிராம்  எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்..