வடமாநில இளம்பெண் கோவையில் தூக்கிட்டு தற்கொலை..

கோவை கவுண்டம்பாளையம், கருப்பசாமி நகரில் வசிப்பவர் ராஜ்குமார் சஹானி . பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி பிரீத்தி குமாரி (வயது 21. ) இவர்கள் இருவரும் 17 -11- 20 23 அன்று காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் பிரீத்தி குமாரி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை . இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..