கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜவகர் ஆகியோர் நேற்று மாலை ரயில் நிலையம் பக்கம் உள்ள லங்கா கார்னர் , பர்மா காலனி பகுதியில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வடமாநில கும்பலை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 11 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 7 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் ஓடிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் சாது ( வயது 34) தர்மேந்தர் பெஹாரா (வயது 24 )ரஞ்சிதா நிக் (வயது 23) பிரசாந்த் தாகூர் ( வயது 36) சாகர் முகாரி ( வயது 57 )நரேந்திர திருப்பதி ( வயது 30) பால தேவ் கிபிலா ( வயது 20)என்பது தெரியவந்தது. இவர்கள் திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வந்தனர். வட மாநிலத்தில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்து கோவை, திருப்பூரில் விற்பனை செய்தது தெரிய வந்தது. 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.