இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டாரத்தில் நயினாமரக்கான் கிராமத்தில் தென்னை வளர்ச்சி வாரியம் மூலமாக தென்னை விவசாயிகளுக்கு தென்னை செயல் விளக்க திடல் மானியம் வழங்குவதற்காக விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் சேகரித்தல் மற்றும் திட்ட விளக்க தொழில் நுட்ப முகாம் 9.10.2023 அன்று காலை நடைபெற உள்ளது. இதில் திருப்புல்லாணி வட்டாரத்தில் உள்ள அனைத்து தென்னை விவசாயிகளும் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தென்னை விவசாயிகள் தென்னை வளர்ச்சி வாரியம் முகாமுக்கு வரும் பொழுது கீழ்க்கண்ட ஆவணங்களை எடுத்து வருமாறு தெரிவித்துள்ளனர்.
கணிணி பட்டா , அடங்கல் ,பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ,வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் , ஆதார் அட்டை நகல் , குடும்ப அட்டை நகல் போன்றவை ஆவணங்களைக் கொண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தென்னை வளர்ச்சி வாரிய அலுவலர்கள் மானிய விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பெற்று செயல் விளக்க திடல் மானியங்களை வழங்க உள்ளனர். அனைத்து தென்னை விவசாயிகளும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வேளாண்மைத்துறை மூலமாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மாவட்ட அளவிலான தென்னை தொழில் நுட்ப கருத்தரங்கம் தென்னை வளர்ச்சி வாரியம், வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் வேளாண்மைத்துறை இணைந்து மாவட்ட அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் 10.10.2023 அன்று இராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற உள்ளது. இதில் தென்னை விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது. மண்டபம் வட்டாரத்தில் தென்னை விவசாயிகளிடம் இருந்து செயல் விளக்க திடல் மானிய விண்ணப்பங்கள் பெறும் முகாம் உச்சிப்புளி அரசு தென்னை நாற்று பண்ணையில் 11.10.2023 அன்று காலை நடைபெற உள்ளது. மேற்கண்ட முகாம்களில் அனைத்து தென்னை விவசாயிகளும் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு வேளாண்மை விரிவாக்க மையம் திருப்புல்லாணி மற்றும் உச்சிப்புளி தொடர்பு கொள்ள திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குநர் எம்,கே. அமர்லால் (9443226130 ) தெரிவித்துள்ளார்.