தமிழகத்தில் தற்போது மருந்துப்பொருட்கள், மளிகை உட்பட அனைத்தும் வீட்டிற்கு வந்து டெலிவரி செய்யப்பட்டு வருகிறது.
இந்த முறை வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இதே போல தமிழக கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் 370 மருந்தகங்கள் மற்றும், 300 பல்பொருள் அங்காடிகளிலும் பொருட்களை டெலிவரி செய்யும் திட்டத்தை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த பண்டக சாலை ஆற்றும் மருந்தகங்களில் மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில் விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கில், கூட்டுறவு பண்டகசாலைகளும், மளிகை, மருந்துகளை டெலிவரி செய்யும் திட்டம் இன்னும் 2 மாதங்களில் தொடங்க திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த டோர் டெலிவரி திட்டம் சென்னையில் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மக்களிடம் இருந்து பொருட்களுக்கான ஆடர்களை பெற செயலி மற்றும் இணையதளம் உருவாக்குவது ஆலோசனை நடைபெற்று வருகிறது..