நர்ஸ், பள்ளி மாணவி திடீர் மாயம்..!

கோவை சிவானந்தா காலனி, ஓஸ்மின்நகரை சேர்ந்தவர் மாயப் பெருமாள் .இவரது 14 வயது மகள் கோவையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 9-ம்வகுப்பு படித்து வருகிறார் .நேற்று முன் தினம் பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து இவரது தாயார் சித்ரா ரத்தினபுரி போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் பாதுஷா வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார் .

இதே போல தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பக்கம் உள்ள அரியநாயகபுரத்தைச் சேர்ந்தவர் பண்டாரம். இவரது மகள் ராமலட்சுமி ( வயது 20) கோவை ஆர் எஸ் புரத்தில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்..இவர் தனது உறவினர் ஒருவரிடம் நட்பு வைத்திருந்தாராம் . இதை அவரது பெற்றோர்கள் கண்டித்தனர்.. இந்த நிலையில் கடந்த 4 – ந் தேதி தேதி ராமலட்சுமியை திடீரென்று காணவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது தந்தை பண்டாரம் காட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.