உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 18 கடைகளில் அதிரடி ஆய்வு – செயற்கை வண்ணம் பூசிய அசைவ உணவுகள் அழிப்பு..!

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில் , திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துவராஜ் அவர்களின் அறிவுறுத்தலின்படி, திருப்பூர்
மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜய் லலிதாம்பிகை அவர்களின் தலைமை மற்றும் மேற்பார்வையிலும், தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட சர்வோமா மற்றும் அசைவ உணவுகள் தயாரித்து விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் சிரஞ்சீவி,பாலமுருகன், கோடீஸ்வரன் மற்றும் நகராட்சி சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வினை மேற்கொண்டனர்.
 இதில் மொத்தம் 18 கடைகள் ஆய்வு செய்யப்பட்டன.இந்த ஆய்வில் அதிக செயற்கை வண்ணும் சேர்க்கப்பட்ட சிக்கன் ஆறு கிலோ, பழைய புரோட்டா இரண்டு கிலோ, அதிகளவு செயற்கை வண்ணம் பூசப்பட்ட மசாலா சிக்கனில் கலக்க வைக்கப்பட்டிருந்த கலர் பொடிகள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்கள் மூன்று கிலோ ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டு அளிக்கப்பட்டன. மேலும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்த கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு அபராதம் ரூபாய் 6000 விதிக்கப்பட்டனர்.
மேலும் வணிகர்களுக்கு தினந்தோறும் சிக்கன் மட்டன் மற்றும் மீன்களை பயன்படுத்தி நன்கு முழுமையாக வேக வைத்து அசைவ உணவு தயாரித்து விற்பனை செய்ய வேண்டும், செயற்கை வண்ணங்களை பயன்படுத்தக் கூடாது, எண்ணெய் வகைகளை தினந்தோறும் அடிக்கடி மாற்றப்பட வேண்டும், இடத்தை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டனர். மேலும் உணவு சம்பந்தப்பட்ட புகார்களுக்கு உணவு பாதுகாப்புத் துறையின் செயலி மற்றும் வாட்ஸ் அப் எண் 9444042322 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்தனர்.