வடகொரியாவில் பைபிள் வைத்திருந்ததற்காக தம்பதியினருக்கு மரண தண்டனையும், 2 வயது குழந்தைக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் பொதுவாக கடுமையான சட்டங்கள் இருப்பதாகவும், சட்டத்தை மீறினால் மூன்று தலைமுறை வரை தண்டனை விதிக்கப்படுகிறது. இதுபோன்ற கொடுமையான விதிகளால் அந்நாட்டு மக்கள் பெரும் துயரை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பைபிள் வைத்திருந்ததற்காக கிறிஸ்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் 2 வயது குழந்தை உட்பட, குடும்ப உறுப்பினர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் கிடைத்ததாக, அமெரிக்க வெளியுறவு துறை ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் வடகொரியாவில் மட்டும் 70,000 பேருக்கு மேல் கிறிஸ்தவர்களாக இருந்த காரணத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் பல குழந்தைகளும் அடங்கும் என தெரிவித்துள்ளது.
பொதுவாக வட கொரியாவில் எந்த ஒரு மதத்தை பின்பற்றினாலும், அவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது, அவர்களை கைது செய்து வடகொரிய போலிஸார் முகாம்களில் அடைத்து, கடுமையாக வேலை வாங்குவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.