கழுத்தை நெரித்து மூதாட்டி படுகொலை_நகை கொள்ளை.. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி இவரது மனைவி தெய்வானை அம்மாள்( வயது 75) கணவர் இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்தார். நேற்று முன் தினம் இரவில் மூதாட்டி மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். அவரது கை, தலை பகுதிகளில் வெட்டு காயங்கள் இருந்தது .அவர் அணிந்திருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது இது குறித்து பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் தெய்வானை அம்மாள் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது .இந்த கொலையிலசந்தேகத்தின் பேரில் 2பெண்கள் உட்பட 4பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..