கோவை ஆவராம்பாளையம், நேதாஜி நகரை சேர்ந்தவர் புல மாடன் ( வயது 77 )இவர் ரத்த கொதிப்பு -நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் விட்டதில் கயிற்றை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்த அவரது மகன் வேல்முருகன் பீளமேடு போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..
முதியவர் தூக்கிட்டு தற்கொலை..
