கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள இருகூர் மார்க்கெட் ரோடு பகுதியில் வசிப்பவர் செல்லதுரை (வயது 70 )இவரது மனைவி பிரிந்து சென்று விட்டதால் இவர் தனியாக வசித்து வருகிறார் . இவர் குடிப்பழக்கம் உடையவர். மேலும் வாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று செல்ல துரையின் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதாக திருப்பூரில் உள்ள அவரது மகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர் நேற்று வந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது செல்லதுரை அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது தெரிய வந்தது .இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது இன்ஸ்பெக்டர் இளங்கோவன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது..
இருகூரில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் முதியவர் பிணம்..
