திருச்சி விமான பயணியின் வயிற்றில் 65 லட்சம் மதிப்புள்ள தங்கம்…

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு பெட்டிக் விமானம் வந்து அடைந்தது அப்போது அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவினர் வழக்கமான சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது அந்த விமானத்தில் பயணித்து வந்த ஆண் பயணியொருவர் அவரின் உடலுக்குள் (அடிவயிற்றில்) 3 கேப்சூல் வடிவிலான உறைகளில் தங்கத்தை வைத்துக் கடத்திவந்தது தெரியவந்தது. அதையடுத்து, அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை மூலம் தங்கத்தை எடுத்துபோது, அதில் 1,025 கிராம் தங்கம் இருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.64.51 லட்சம். அதேபோல், துபாயிலிருந்து வந்த விமானத்தில், பெண் பயணியொருவர், 772 கிராம் தங்கத்தைக் கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.48.60 லட்சம் என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பாக சுங்கத்துறையினர் வழக்கு பதிவுசெய்து மொத்தம் ரூ.1.13 கோடி மதிப்பிலான 1,797 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். அதோடு, நூதனமான முறையில் தங்கம் கடத்தி வந்த இருவரையும் கைதுசெய்து, தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் ஆண் பயணி ஒருவர் தனது வயிற்றுக்குள் வைத்து தங்கத்தைக் கடத்தி வந்த சம்பவம், விமான நிலைய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.