1,330 தமிழ் எழுத்துக்களைக் கொண்டு உருவான பிரமாண்ட திருவள்ளூவர் சிலை இன்று திறப்பு…

கோயம்புத்தூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏரிக்கரை அருகே 25 அடி உயரத்தில், 15 அடி அகலத்தில், 20 அடி நீளத்தில், 2.5 டன் எடையில் தமிழ் புலவர் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை, திருவள்ளுவர் எழுதிய 1,330 திருக்குறளைப் போற்றும் வகையில், 1,330 தமிழ் எழுத்துக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, 247 எழுத்துக்களையும் மீண்டும் மீண்டும் உபயோகித்து செய்யப்பட்டுள்ளது.

இந்த சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார் . மேலும் கோவை மாநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தையும் திறந்து வைத்தார் . இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 50 கோடி ரூபாய் செலவில் குறிச்சிகுளம் உட்பட கோவையின் ஏழு பழமையான ஏரிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஏரி முகப்பு மேம்படுத்தப்பட்டு, தமிழர் கலாசாரம் மற்றும் பண்டிகைகளை பிரதிபலிக்கும் சிற்பங்கள் கொண்டு அழகுபடுத்தப்பட்டுள்ளன.