கோவை அருகே உள்ள குரும்பபாளையத்தில் எஸ். என். எஸ் .நர்சிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 20 ) என்பவர் பி. பார்ம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் கல்லூரிக்கு எளிதாக சென்று வரும் வகையில் அந்தப் பகுதியில்சக மாணவர்களுடன் தனியாக அறை எடுத்து தங்கி இருந்தார். அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் தூத்துக்குடியை சேர்ந்த பிரவீன் ( வயது 21) என்பவர் அந்தப் பகுதியில் தனதுநண்பர்களான தினேஷ் உட்பட சிலருடன் அறை எடுத்து தங்கி இருந்தார். மணிகண்டனும், பிரவீனும் அடிக்கடி சந்தித்ததால் நண்பர்கள் ஆனா கள். இதனால் மணிகண்டன் அடிக்கடி பிரவீன் அறைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்து சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன் பிரவீனிடம் தனது தந்தையின் தொழிலுக்கு ரூ 1 லட்சம் அவசரமாக தேவைப்படுகிறது. எனவே யாரிடமாவது வட்டிக்காவது பணம் வாங்கி தா என்று கேட்டு உள்ளார். அதற்கு அவர் நான் கேட்டு சொல்கிறேன் என்று கூறியுள்ளார். பலரிடம் கேட்டும் அவருக்கு பணம் கிடைக்கவில்லை. இதற்கு இடையே பிரவீன் அறையில் வைத்திருந்த அவரது 10 பவுன் செயின்திடீரென்று மாயமானது .இந்த சம்பவம் நடந்த பின்னர் மணிகண்டன், பிரவீன் அறைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மணிகண்டன் பிரவீன் அறைக்கு சென்றார். அப்போது அங்கிருந்தபிரவீன் தினேஷ் உட்பட 5 பேர் சேர்ந்துபிரவீனின் 10 பவுன் தங்கச் செயினைநீதானே திருடினாய்? என்று கூறியதுடன் ,அந்த நகையை கொடுக்கவிட்டால் உன்னை விடமாட்டோம் என்று கூறி அங்குள்ள அறையில் 3 நாட்கள் அடைத்து வைத்து பெல்ட் மற்றும் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் சாப்பாடு கூட இல்லாமல் அவதிப்பட்ட மணிகண்டன் அங்கிருந்து தப்பி இது குறித்து தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக கோவைக்கு வந்து மணிகண்டனை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு டாக்டர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் குறித்து மணிகண்டன் கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார் .அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரவீன், தினேஷ் ஆகியோரை நேற்று கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரைதேடி வருகிறார்கள்..
கோவை அருகேகல்லூரி மாணவரை அறையில் அடைத்து வைத்து சித்ரவதை.. 2பேர் கைது…
