இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக ஆளுநருக்கு திருக்குறள் புத்தகம் அனுப்பும் போராட்டம்
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி. நாடு வளர்ச்சி அடைய பொருளாதார ரீதியில் மட்டும் இல்லாமல் ஆன்மிக ரீதியாகவும் வளர்ச்சி அடைய வேண்டும். திருக்குறள் ஆன்மிகம் மற்றும் நீதி சாஸ்திரம் குறித்து பேசும் நிலையில் அரசியலுக்காக இதனை வெறும் வாழ்கை நெறிமுறை புதக்கமாக கூறி வருகின்றனர் ’’ என பேசினார்.
இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆளுநருக்கு திருக்குறள் புத்தகங்களை அனுப்பி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியக் குழு சார்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முழுமையாக திருக்குறளை படிக்க வலியுறுத்தி திருக்குறள் புத்தகங்களை அஞ்சல் மூலம் அனுப்பி வைத்தனர். ஆளுநர் முழுமையாக திருக்குறளை படித்து விட்டு கருத்துகளை பேச வேண்டும் என தெரிவித்தனர்.
இந்நிகழ்வுக்கு DYFI ஒன்றிய தலைவர் சிவசங்கரன் தலைமை தாங்கினார் ஒன்றிய செயலாளர் ந. ராஜா ஒன்றிய நிர்வாகிகள் மைதிலி மற்றும் ஜோஸ்வா உள்ளிட்ட வாலிபர் சங்க தோழர்கள் கலந்து கொண்டனர்..